பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 இவி

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐஎக்ஸ்1 என்ற தனது முதலாவது எலக்ட்ரிக் எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 66.4 கிலோவாட் அவர் பேட்டரி, இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இடம் பெற்றுள்ளன. இவை அதிகபட்சமாக 313 பிஎச்பி பவரையும், 494 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை செல்லும்.

5.6 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கி.மீ வரை செல்லும் . 130 வாட்ஸ் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 29 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 கி.மீ தூரம் வரை ஓடும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!

புதுச்சோி மாநில பாஜக தலைவரை நீக்கக் கோரி பாஜக நிர்வாகி போராட்டம்..!!

செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்