பிஎம்டபிள்யூ 620டி எம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் 620டி எம் ஸ்போர்ட் சிக்னேச்சர் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் முன்பு பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருந்தது. தற்போது டீசல் இன்ஜின் வேரியண்ட்டிலும் வெளிவந்தளளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தம். 7.9 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. கம்போர்ட், கம்போர்ட் பிளஸ், ஸ்போர்ட், எக்கோ புரோ மற்றும் அடாப்டிவ் ஆகிய டிரைவிங் மோட்கள் உள்ளன. 12.3 அங்குலத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என இரண்டு ஸ்கிரீன்கள் உள்ளன. 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ரிமோட் கன்ட்ரோல் பார்க்கிங் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், கிளைமேட் கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.78.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஐ.டி.அதிகாரி என மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது..!!

சென்னை ராயபுரம் அருகே வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி விபத்து!

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நேரம் இது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து