திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் வழிகாட்டுதலின் படி, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் திருநின்றவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இணைந்து ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் குகன் தலைமை தாங்கினார். துணைமுதல்வர் முனைவர் விஜயகுமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதா, சுகாதார ஆய்வாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜதுரை, புவனேஷ், விருந்தோம்பல் துறைத் தலைவர் சின்ன ராஜா, ஜெயா பிசியோதெரபி கல்லூரி முதல்வர் பாலச்சந்தந்திரன், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

Related posts

எண்ணூர் சுடுகாட்டில் செல்போன் வெளிச்சத்தில் உடல் தகனம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை

ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்திட்யாசத்தில் ராகுல் காந்தி வெற்றி