ஆளுநருக்கு கருப்புக்கொடி

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். விழாவை முடித்தபின் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கிருந்து கார் மூலம் திருச்சி தேசியக் கல்லூரிக்கு புறப்பட்டார்.

இந்நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவானைக்காவல் சிக்னலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியுடன் திரண்டு வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை