பாஜவுடன் கூட்டணியால் வாய்ப்பு இழப்பு தெலுங்கு தேசம் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி: சந்திரபாபு நாயுடு சமாதானம்

திருமலை: ஆந்திரா மாநிலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. இந்நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. பாஜக- தெலுங்குதேசம்-ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு வீட்டில், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒன்றிய அமைச்சருமான கஜேந்திரசிங், பாஜக தேசிய துணைத்தலைவர் பைஜியாந்த் பாண்டே மற்றும் ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எந்தெந்த தொகுதிகளில் யார், யாருக்கு ஒதுக்குவது என ஆலோசிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. 2வது நாளாக இந்த கூட்டம் நேற்று காலையும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதனிடையே தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் என கடந்த மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுமார் 90 சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதி வேட்பாளர்களை சந்திரபாபு அழைத்து நேற்றிரவு பேசியுள்ளார். கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால் அவர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. இதனால் அவர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர்களை அழைத்து சந்திரபாபு நாயுடு சமாதானப்படுத்தினார்.

Related posts

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்