சிவசேனா (ஷிண்டே), எம்.என்.எஸ். கட்சிகளை இணைக்க முடிவு.. பாஜக திட்டத்தால் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!

மகாராஷ்டிரா: சிவசேனா ஷிண்டே பிரிவு, மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய காட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு ராஜ் தாக்ரேவை தலைவராக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதால் மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா, உத்தவ் தாக்கரே பிரிவு மற்றும் காங்கிரஸ் கூட்டணியை பாஜக கூட்டணி எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், சிவசேனா வாக்குகளை கவரும் விதமாக சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் அண்ணன் மகனும், மகாராஷ்ட்டிர நவநிர்மாண் அமைப்பின் தலைவருமான ராஜ் தாக்ரேவை வளைத்தது பாஜக. கடந்த வாரம் ராஜ் தாக்ரேவை டெல்லிக்கு அழைத்த உள்துறை அமித்ஷா, சிவசேனா ஷிண்டே பிரிவு, நவநிர்மாண் இணைப்பு குறித்து பேசியதாக தெரிகிறது. ஷிண்டே சிவசேனா, நவநிர்மாண் சேனாவும் இணைக்கும் பாஜக-வின் திட்டம் முதலமைச்சர் ஷிண்டேவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவரது கட்சி நிர்வாகிகளிடம் பேசி ஒருமித்த கருத்தை உருவாக்குமாறு பாஜக நிர்பந்தித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், ராஜ்தாக்ரேவின் தலைமையை ஏற்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தயங்கியதை அடுத்து மக்களவை தேர்தல் எவ்வாறு இருப்பினும் முதலமைச்சர் பதவி பறிக்கப்படாது என்று ஷிண்டேவுக்கு பாஜக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் சிவசேனாவின் வாக்கு வங்கிகள் சிதறடிக்க ராஜ்தாக்ரேவை பாஜக ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மராட்டிய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.