பாஜகவினர் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை தருவதாக வீரலட்சுமி புகார்: நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

சென்னை: அண்ணாமலை தூண்டுதலின் பேரில் பாஜகவினர் ஆபாச விடீயோக்களை அனுப்பி தோலை கொடுப்பதாக தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி அளித்துள்ள புகார் மனுவில் பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் கருப்பு பண முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியினர் வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தரும் வேளையில் அவர் ஈடுபட்டு வருவதாக வீரலட்சுமி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதால் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் அக்கட்சியினர் 15க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீரலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். மாலினி ஜெயச்சந்திரன் குறித்து தொடர்ந்து புகார் அளித்தும் அண்ணாமலை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ள வீரலட்சுமி. பாஜகவிற்கு அந்த பெண்ணிற்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று வினா எழுப்பியுள்ளார்.

Related posts

புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி