பூந்தமல்லி அருகே பைக்குகள் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). தனியார் ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே, குடிசை வீடு அமைத்து, தனது குடும்பத்தினரின் 5க்கும் மேற்பட்ட டு வீலர்களை நிறுத்தி இருந்தார். இந்நிலையில், 2 பைக்குகள் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை பார்த்ததும் வெங்கடேசனும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து, இருசக்கர வாகனங்களில் பரவியிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இதற்குள், அந்த 2 இருசக்கர வாகனங்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டன. தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் 2 பைக்குகள் தீப்பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு