போபாலில் இருந்து டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தல்: ஓட்டுநர் உள்பட 20 பேர் கைது

செங்கல்பட்டு: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்திவந்த 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் 16,000 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீசார் மதுராந்தகத்தை அடுத்த கோவில் சந்திப்பில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்ததில் வைக்கோலால் மறைத்து 175 பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்த கிஷோர் என்பவரின் மூலமாக போபால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலிருந்து எரிசாராயம் கடத்தி வருவது தெரியவந்தது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த 50 வயதான தனசேகரன் என்பவர் போபால், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் விநியோகம் செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ள போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர். சுமார் 17 ஆயிரம் லிட்டர் கடத்தல் எரிசாராயத்தில் சேதமடைந்த 1089 லிட்டர் போக மீதமுள்ள 15,911 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்