இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்..!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியதாவது, இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாடகரும், பெண் இசையமைப்பாளராகப் பல படங்களில் பணியாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர்கள் இளம் வயதில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். தன்னுடைய குரலாலும், இசையாலும் தனித்த திறமையாளராகப் புகழ்பெற்ற அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது தந்தையார் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள், வாழ்விணையர் ஆகியோருக்கும் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு