சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன், 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (<https://awards.tn.gov.in>) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:

* தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும்
வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக
பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம)
தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை:

* விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-4) தமிழ்-2, ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, அளவு
புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் – தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் (Soft copy & Hard Copy).
* இணைப்பு – படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் (Soft copy & Hard Copy).

எனவே அனைத்து மாவட்டங்களிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்களை நேரில் அணுகி வருகின்ற 10.06.2023 க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி