ஆதிதிராவிடர் நல துறை சார்பில் திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், திருவூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் ஸ்ரீ ராம், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை பெருந்தலைவர் எம்.பர்கத்துல்லாகான் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த் வரவேற்றார். பூமி பூஜைக்கான அடிக்கலை நாட்டி வைத்து ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது: தற்போது திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாய கூடம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல், விளிம்பு நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல் கண்ணப்பாளையம், வெள்ளியூர் ஆகிய இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்டுக்கு 20 சமுதாயக் கூடம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிக்கலை ஊராட்சியிலும் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜி.விமல்வர்ஷன், ஒன்றிய நிர்வாகிகள் குட்டி (எ) பக்தவச்சலு, மகேஸ்வரி பாலவிநாயகம், ஆர்.திலீப்ராஜ், கே.கிரி, வேதவள்ளி சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி, கிளை நிர்வாகிகள் தாமரை செல்வன், கஜேந்திரன், சுபாஷ் சந்திரபோஸ், அன்புநாதன், லட்சுமிபதி, சரவணகுமார், சசி பிரதாப், துரைராஜ், முருகதாஸ், மகேஷ், வினோத், சுரேந்தர், ரூபி என்கிற ரூபேந்திரன், முனுசாமி, ரொமாரியே, நாகராஜ், ரவிகுமார், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், புவியரசு, ஏ.ஜெயபால், விசிக நிர்வாகி திருவூர் சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது