வாழைப்பழ கேக்

தேவையான பொருட்கள் :

மைதா மாவு : ¼ கிலோ
சக்கரைப் பவுடர் : ¼ கிலோ
வெண்ணெய் : 200 கிராம்
வாழைப்பழம் : 8
முந்திரி, பாதாம், உலர் திராட்சை : 1 கப்
பேக்கிங் பவுடர் : 1 ஸ்பூன்
சமையல் சோடா : 1/2 ஸ்பூன்
முட்டை : 4
வாழைப்பழ எசன்ஸ் : 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா : 1 ஸ்பூன்
மோர் – 1 கப்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரை நன்றாக கலந்து மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் மோர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். திக்கான பதம் வந்ததும், அதனுடன் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் கேக் ட்ரேயில், வெண்ணெய் தடவி, சேர்த்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து,  மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து, அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேக வைக்கவும். இதனை தொடர்ந்து கேக் நன்கு வந்துள்ளதா என சரி பார்த்து எடுக்கவும். பிறகு ஆற வைத்து துண்டுகளாக பரிமாறவும்.

 

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா