பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…

மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். திறந்த ஜீப்பில் வந்து பிரசாரம் செய்த அவருக்கு மாலைகள் அணிவித்தும், துண்டு போர்த்தியும் கட்சியினர் வரவேற்றனர். அப்போது தொண்டர் ஒருவர் அதிமுக கொடியின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் பலூன்களை ஊதி கட்டி எடுத்து வந்து, செல்லூர் ராஜூ வந்த பிரசார வாகனத்தில் கட்டுவதற்காக, அவரது கையில் வழங்கினார்.

இதைப் பெற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ, வேட்பாளர் சரவணன் இருவருமே காற்றின் வேகத்திற்கு அங்கும் இங்கும் அலைக்கழித்து பறந்ததால், பலூன்களை ஒவ்வொன்றாக கையால் அழுத்தி உடைத்தும், மீதி பலூன்களை பறக்கவிட்டும் சிரித்தபடியே விளையாடினர்.

பறக்க விட தந்த பலூனை, குழந்தை போல் உடைத்து விளையாடியதைக் கண்டு அதைக் கொண்டு வந்த தொண்டர் கவலைக்கு ஆளானபோதும், பிற தொண்டர்களும், பொதுமக்களும் வேறு வழியின்றி செல்லூர் ராஜூ செயலுக்கு கைதட்டியபடி தங்கள் சிரிப்பைக் காட்டினர்.

Related posts

சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்

குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு

சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்