மேகதாது அணை கட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்திய அய்யாகண்ணு கைது

சென்னை: காவிரியில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் குழு டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை சென்னை வந்தனர். பின்னர் திடீரென அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் 90 பேர், போலீசார் தடைவிதித்துள்ள சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய அய்யாகண்ணு உட்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் போலீசார் நேற்று மாலை விடுவித்தனர்.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது