சமத்துவ கோட்பாடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா?.. அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என புகழ்ந்த ஆளுநருக்கு கண்டனம்..!!

சென்னை: அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் வலுத்துள்ளது. அய்யா வைகுண்டரின் 1992வது அவதாரம் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வைகுண்டரை விஷ்ணு பகவானின் என்று புகழ்ந்திருந்தார். இதற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தமிழ்நாட்டின் சமய, சமத்துவம் கோட்பாடுகளை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ள அவர்கள் ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோரின் இதுபோன்ற அரசியலை எதிர்ப்பதாக கூறியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையை தொடர்ந்து செய்வதாகவும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தலைவர் ரங்கநாதன் விமார்சித்துள்ளார்.

சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிளுக்குள் அடைப்பது போன்ற ஆன்மிக சித்து வேலைகளை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மிகம் உறுதியாக நிராகரிப்பதாகவும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பாஜக இந்துக்கள் ஆன கட்சி என்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக குரல் கொடுக்காதது ஏன்? என்றும் தமிழ் ஆன்மீக சமூகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது