அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த இந்த நிதியாண்டிற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பேரவையில் நிதி அமைச்சர் 2023-24ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில், “நகர்ப்புற பகுதிகளிலும் ஊரக பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது” என்று அறிவித்தார். இதற்கிணங்க, இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடிக்கான நிர்வாக அனுமதியும், 2023-24ம் நிதியாண்டிற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்