ஊராட்சிமன்ற தலைவர் ஏற்பாட்டில் பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: 50 ஆடு வெட்டி மாணவிகளுக்கு பிரியாணி விருந்து

ஆவடி: ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுத்தேர்வு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் அதற்காக மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தேர்வின்போது உறுதியாகவும் அச்சமின்றி தேர்வு எழுதவும் அறிவுறுத்தினர். இந்த தேர்வின்போது உடல் நிலை உறுதியாக இருக்க மாணவிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதற்கு 50 ஆடுகளின் இறைச்சியை கொண்டு 15 டபராக்களில் 1 டன் அளவிலான பிரியாணி சமைக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமில்லாமல் பள்ளி பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.

இதேபோல், அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்கள் பள்ளியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாணவிகள், தங்களுக்கு கல்வி கற்பிக்கும் 35க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், எரேசர் போன்ற தொகுப்புகள் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி அவர்களால் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தனது சொந்த செலவில் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா