அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அவிநாசி அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பிப்ரவரி 2ம் தேதி திருக்குட நன்னீராட்டு கிருவிழா நடைபெறுகின்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர். அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்திற்கான தேதி குறித்து வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கும்பாபிஷேகம் வருகின்ற 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி காலை 7 25 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்ப லக்கினம் சுவாதி நட்சத்திரத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறும் என அறிவித்தனர் கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான மராமத்து திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருத்தலத்தில். கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் ஆனது.

இதனால், கும்பாபிஷே திருப்பணிகளுக்காக ஆரம்ப கால மராமத்து பணிகளில், அரசமரத்து விநாயகருக்கு முதலில் பாலாலயம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பாலாலயம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சந்ததியின் முன் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.11 வட்சத்தில் திருப்பணி செய்வதற்கான பாவால பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து கோபுரத்திற்கு வர்ணம் இட்டும் பணிகள் முடிவடைந்தது.

முன்னதாக ஜூலை 23ம் தேதி கோவிலில் உள்ள பரிவார் சன்னதிகளுக்கும், ஆகஸ்ட் 1ம் தேதி கோலில் நுழைவாயிலில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரத்திற்கும் பாலாலயம் நடைபெற்றது. தற்போது அம்மன் சன்னதியின் முன் உள்ள ராஜகோபுரம் பணிகள் முழுமை அடைந்துள்ளதால் கோவில் சன்னதியின் நுழைவாயில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகளும் சுதைச் சிற்பங்களை மராமத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு