ஜல்லிக்கட்டு நிறைவு: 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாயகன் கார்த்திக்கிற்கு கார் பரிசு

மதுரை; 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 400 வீரர்கள் களம் கண்டனர்.

அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரர் கார்த்தி 17 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித்குமார் 2-வது இடம்; 9 காளைகளை அடக்கி முரளிதரன், முத்துக்கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. கார்த்திக்கிற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் காரை பாரிசாக வழங்கினர்.

Related posts

20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!