ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு..!!

சென்னை: ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை டிடிஎச் மென் சாலையில் உள்ள கிருஷ்ணா ஜெவெலரியில் மதியம் 12 மணி அளவில் காரிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர். அந்த பகுதியில் வடமாநிலத்ததை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், நகைக்கடையில் உரிமையாளரை மிரட்டி, கட்டிப்போட்டு, துப்பாக்கியின் அடிபாகத்தில் தாக்கி அவரிடமிருந்து ரூ.1.50லட்சம் மதிப்புள்ள நகைகள், 5 லட்சரூபாய் பணமும் கொள்ளையடித்து சென்றனர். அவர்களுடைய புகைப்படம் சிசிடிவி கேமரா மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய புகைப்படங்களை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அசிஸ்டன்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கொண்டுவந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து குற்றவாளிகளை விரைவாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் களங்களில் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க சிரமம் உள்ளதா? என்ற கேள்விக்கு தேர்தல் பணியின் பாதுகாப்பு என்பது வேறு, குற்றவாளிகளை கண்டு பிடிப்பது வேறு என்றும் அவர் கூறினார். சென்னை ஆவடி காவல் ஆணையர்கள், தாம்பரம் ஆணையர்கள் உள்பட அனைத்து பகுதியிலும் கொள்ளையர்களின் புகை படங்களை கொடுத்து தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து