திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்

வேடசந்தூர்: வடமதுரை அருகே திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரை சேர்ந்தவர் நாட்ராயன் (52). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆட்டோவில் குருந்தம்பட்டியை சேர்ந்த டீக்கடையில் வேலை பார்க்கும் பழனிச்சாமி (30) என்பவரை வாடகைக்கு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

வடமதுரை அருகே குருந்தம்பட்டி சாலையில் கெங்கையூர் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்தது. இதில் நாட்ராயன், பழனிச்சாமி படுகாயமடைந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் நேற்று காலை வரை பல இடங்களில் தேடினர். அப்போது கெங்கையூரில் உள்ள கிணற்றுக்குள் டிரைவர் நாட்ராயனின் உடல் மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்தது வந்த வேடசந்தூர் தீயணைப்புதுறையினர் கிணற்றில் இறங்கி நாட்ராயனின் உடலை முதலில் மீட்டனர்.

பின்னர் ஆட்டோவை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வந்து, அதற்குள் சிக்கியிருந்த பழனிச்சாமியின் உடலை மீட்டனர். இதையடுத்து 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த நாட்ராயனுக்கு வசந்தா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். அதேபோல் பழனிச்சாமிக்கு சித்ரா என்ற மனைவி, ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்