ஆடி கியூ8 இ-டிரான்

ஆடி நிறுவனம் புதிய கியூ8 இ-டிரான் என்ற காரை அறிமுகம் செய்திருந்தது. மேம்படுத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் காரில் 50 மற்றும் 55 என இரண்டு டிரிம்கள் உள்ளன. 50 டிரிம்ல் 95 கிலோவாட் அவர் பேட்டரி , டூயல் மோட்டார்கள் உள்ளன. இவை அதிகபட்சமாக 340 எச்பி பவரையும் 664 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 491 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லாம். 55 டிரிம்மில் 114 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது.

இது அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 664 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கி.மீ தூரம் வரை செல்லலாம். இந்த கார் வரும் 18ம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு