திருவேற்காடு எஸ்ஏ கல்லூரியில் ஆத்திசூடி இலக்கியத் தேடல் நிகழ்ச்சி

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காடு எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், இலக்கியக் கூடல் மற்றும் ஹம்சத்வனி ஆகியவை இணைந்து ‘ஆத்திசூடி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான இலக்கியத் தேடல் நிகழ்ச்சியை கல்லூரி கலையரங்கில் நடத்தியது.‌ நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இயக்குநர் சாய் சத்யவதி, கலூரி முதல்வர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்துறைத் தலைவர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். இலக்கியக் கூடல் செயலாளர் மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இலக்கியக் கூடல் தலைவர் ரேகா மணி அறிமுக உரை நிகழ்த்தினார். பட்டிமன்ற பேச்சாளர் தொலைக்காட்சி புகழ் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘எது அன்பு ?’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி அன்பின் பன்முகத் தன்மையைப் பல்வேறு சான்றுகளுடன் சிறப்பாக எடுத்துரைத்தார்.‌ மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.‌

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!