ஆசிய பாரா விளையாட்டில் சாதிக்கும் இந்திய வீரர்கள்: ஈட்டி எறிதலில் தங்கம், வெண்கலம் வென்று அசத்தல்.. சுமித் அன்டில் 73.29மீ. தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை..!!

சீனா: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3வது நாளான இன்று ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். சீனாவின் ஹாங்கோசன் நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டின் 3வது நாளான இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆடவர்களுக்கென எப்.64 பிரிவில் கீழ் நடத்தப்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்காக ஈட்டியை 73.29 மீட்டர் தூரத்திற்கு வீசிய அவர், புதிய உலக சாதனைகளையும் நிகழ்ச்சியிருக்கிறார். இதேபோட்டியில் இந்தியாவின் புஷ்பேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்டேயான்ச் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் பவீனா பட்டேல், வெண்கலப் பதக்கம் வென்று தந்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற பேட்மிட்டன் கலப்பு இரட்டையர் போட்டியிலும் இந்தியாவிற்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் நீடிக்கிறது. முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 17 பதக்கங்கள் கிடைத்திருந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று 4 தங்கம் உட்பட 18 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றிருக்கின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்