ஆஷஸ் டெஸ்ட் தொடர் காயத்தால் விலகினார்: நாதன் லயன்

லண்டன்: தொடர்ச்சியாக 100 டெஸ்ட்களில் விளையாடிய முதல் பந்துவீச்சாளராக சாதனை படைத்த ஆஸி. வீரர் நாதன் லயன், காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரலேிய சுழற்பந்து வீச்சாளர் லயன் (35), 2011ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 122 டெஸ்ட்களில் விளையாடி இருக்கிறார்.
அதில் கடைசி 100 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 37வது ஓவரில் வெளியேறினார். அதன் பிறகு 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய மட்டும் வந்தார். கடைசி விக்கெட்டாக களம் கண்ட அவர் 4 ரன்னில் வீழ்ந்தார். 2வது இன்னிங்சில் பந்துவீசவில்லை. அவர் சிகிச்சையுடன் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் எஞ்சிய 3 டெஸ்ட்களில் விளையாடாமல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்