ஆஷஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. போட்டி நடைபெற உள்ள அரங்கிலும், அரங்குக்கு வரும் வாயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காரணம்… லண்டனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ சுற்றுச்சூழலியல் அமைப்பை சேர்ந்த போராட்டக்கார்கள் மைதானத்துக்குள் நுழைந்து விட்டனர். அதுமட்டுமின்றி பேர்ஸ்டோவை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கியதால் ஆஸி. வீரர்கள் மீது இங்கிலாந்து ரசிகர்களும் கோபத்தில் இருக்கின்றனர். 2வது டெஸ்டின் கடைசி நாளில் ஆஸி. வீரர்களிடம் எம்சிசி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி தொடரும் பிரச்னைகளால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்

புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்வு!!