சென்னை, தங்கசாலை, அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.5 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு.

சென்னை: சென்னை, தங்கசாலை, அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.5 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (09.06.2023) சென்னை, தங்கசாலை, அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, தங்கசாலை, அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,500 சதுரடி பரப்பிலான கட்டிடங்கள் மற்றும் மின்ட் தெருவில் உள்ள அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலுக்கு சொந்தமான 1015 சதுரடி பரப்பிலான கட்டிடங்கள் 11 நபர்களுக்கு வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததால் சட்டப்பிரிவு 78-ன்படி சென்னை மண்டல இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6.5 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு

தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை