ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு!

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் போலீசார் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், ஆர்.கே.சுரேஷின் சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது, அவர் துபாயில் இருப்பதால், அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

Related posts

சூப்பர்-8க்கு முன்னேறியது இங்கிலாந்து

சொல்லிட்டாங்க…

புல்லட்சாமிக்கு திடீரென அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா