கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நவம்பர் மாதம் கைத்தறி கண்காட்சி: திமுக நெசவாளர் அணி அறிவிப்பு

சென்னை: சென்னை தியாகராய நகரில் திமுக நெசவாளர் அணியின் மாவட்ட, மாநகர, மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டனர். இதில், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய ஐந்து மண்டலங்களிலும் நெசவாளர்களின் கைவண்ணத்தில் நெசவு செய்த பொருட்களை வைத்து கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசுகையில். “தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 18 நூற்பாலைகள் இருந்தது. ஆனால் இதில் 12 நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டது. தற்போது 6 நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் அதனை ஆபத்தில் இருந்து மீட்டவர் முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நூற்பாலை தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் வைப்புநிதி வழங்கப்படவில்லை. இதனை அறிந்த முதல்வர் தொழிலாளர் வைப்பு நிதியாக ரூ.4.14 கோடி வழங்கியுள்ளார்” என்றார். நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் நாகலிங்கம், மாநில செயலாளர்கள் சச்சிதானந்தம், பழனிசாமி, காஞ்சி. அன்பழகன், பழனிசாமி, பரணி, மணி, நெல்லை பெருமாள், நாகராஜன், சிந்து ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், மணிமாறன், ராமசாமி, கோவிந்தசாமி சென்னை (மே) மாவட்ட அமைப்பாளர் அரவிந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்

ஜூன் 12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை