மகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் பாட்டி, பேத்தி எரித்துக்கொலை: தீ வைத்தவர் விஷம் குடித்து தற்கொலை

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தீ வைத்து எரித்ததில் பாட்டி, சிறுமி இறந்தனர். தீவைத்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி(50). பொதுவக்குடியை சேர்ந்தவர் குருவம்மாள்(52). இவர், தனது மகளான வனிதாவின் 15 வயது மகன், 12 வயது மகளுடன் தோப்பில் பராமரிப்பு பணிகளை செய்து வந்தார். குருவம்மாளின் மகள் வனிதா விவாகரத்து பெற்ற நிலையில், தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு ஆறுமுகசாமி அடிக்கடி குருவம்மாளுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனிதா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி, நேற்று முன்தினம் இரவு குருவம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபம் தீராத ஆறுமுகசாமி நேற்று அதிகாலை குருவம்மாள் மற்றும் பேர குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் குருவம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இழந்தார்.

தீக்காயம் அடைந்த சிறுவன், சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார். தீ வைத்த ஆறுமுகசாமி தோப்பு அருகிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எமனேஸ்வரன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்