கோடரியுடன் தகராறு: சிங்கப்பூரில் தமிழர் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் கோடரியுடன் தகராறில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் நகரில் உள்ள ஸ்டாம்பர்ட் ரோடு, விக்டோரியா ரோடு சந்திப்பில் கையில் கோடரியுடன் இளைஞர் ஒருவர் தகராஜில் ஈடுபட்டார். இதில் 71 வயது முதியவர் காயமடைந்தார். அங்கு வந்த காவல்துறை வாகனத்தை நோக்கி அவர் ஆயுதத்துடன் நடந்து சென்றார். அப்போது, போலீசார் துப்பாக்கி எடுத்து அவரை நோக்கி குறி பார்த்தனர். இதையடுத்து, கோடரியை அவர் தூக்கி எறிந்து விட்டார். இதை தொடர்ந்து மனோகர் திருநாவுக்கரசு( 25) என்ற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவரிடம் இருந்த கோடரியும் கைப்பற்றப்பட்டது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு