“அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய சிறுத்தை கடலூர் அல்லது பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும்”: வனத்துறை தகவல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய சிறுத்தை கடலூர் அல்லது பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரியலூர் செந்துறையில் 11ல் நடமாடிய சிறுத்தை இடம்பெயர்ந்திருக்கலாம் என வனத்துறை கூறியுள்ளது. ஏப்ரல் 12ல் நின்னியூரில் சிறுத்தை கால்தடம் பதிவாகி இருந்த நிலையில் 3 கூண்டுகள் வைக்கப்பட்டன. 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காத நிலையில் வேறு பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கூண்டுகளை இடம் மாற்றியும் சிறுத்தை சிக்கவில்லை; 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவற்றிலும் சிறுத்தை பதிவாகவில்லை. கூண்டு வைப்பதற்கு முன்பே சிறுத்தை இடம்பெயர்ந்திருக்கலாம் என அரியலூர் வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், கடலூர் மாவட்ட ஆற்றுப்படுகைகளில் தேடல் பணியில் ஈடுபடவுள்ளோம் என வனத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு