நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மதுக்கரை : கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் முத்துக்கவுண்டனுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவிகள் அபிநயா, பிருந்தா ஆகிய இரண்டு பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவ கல்வியில் சேர்வதற்காக முத்துக்கவுண்டனுர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வழி காட்டுதல் உடன் நீட் தேர்வில் கலந்து கொண்டனர்.
அந்த தேர்வில், அவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்று பல் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு முத்துக்கவுண்டனுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் தலைமை ஆசிரியர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு (எ) திருநாவுக்கரசு கலந்து கொண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மற்றும் வெற்றி பெற காரணமாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், ஆடிட்டர் ஞானசுந்தரம்,முத்துசாமி, சரவணக்குமார், சிவராசுசதீஷ்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!