ஐஐடி வெளிநாட்டு வளாகத்தில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி சான்சிபார் வளாகம், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் 4ஆண்டு இளநிலை அறிவியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் 2 ஆண்டு முதுநிலை தொழில்நுட்பப் பட்டம் ஆகியவற்றை வழங்குகிறது. அனைத்து நாட்டு மாணவர்களும் இந்த பாடப் பிரிவுகளில் சேரலாம். இந்த படிப்புகளுக்கு 2024-25க்கான 2வது தொகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது பிஎஸ் படிப்பிற்கு ஏப்ரல் 15ம் தேதியும், எம்டெக் படிப்பிற்கு மார்ச் 15ம் தேதியும் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

Related posts

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு