தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்ஐ பணியிடங்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பம்: ஆன்லைனில் வெளியிடுகிறது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்ஐ பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரும் ஜூன் 1ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிநாடு சிறப்பு காவல்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பம் வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரு.36,900- 1,16,600. காலிப்பணியிடங்கள் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) ஆண்கள் 255, பெண்கள் 109 மற்றும் தமிழ்நாடு காவல் சார் நிலைபணி 2 என மொத்தம் 366 பணியிடங்கள், காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) ஆண்கள் 99, பெண்கள் 42, தமிழ்நாடு காவல் சார்நிலை பணி 4 என மொத்தம் 145 பணியிடங்கள். காவல் சார்பு ஆய்வாளர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) ஆண்கள் 110 என மொத்தம் 621 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த காலிபணியிடங்களுக்காக வரும் ஜூன் 1ம் தேதி இணைய வழியில் விண்ணப்பம் துவங்கும், இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 30ம் தேதி எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம். வயது 1.7.2023ன்படி குறைந்தபட்ச 20 வருடங்கள் அதிகபட்சம் 30 வருடங்கள் (வயது உச்சவரம்பு விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு தகுந்தப்படி மாறுபடும்). குறிப்பு: மொத்த காலி பணியிடங்களிலிருந்து 20 சதவீதம் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், மீதமுள்ள 80 சதவீதம் காலி பணியிடங்களில், சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தலா 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். கூடுதல் தகவல்கள் மற்றும் இணைய வழி விண்ணப்பம் பெற www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு விபரம் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி

25 கிலோ தங்கம் கடத்திய ஆப்கான் தூதரக பெண் அதிகாரி திடீர் ராஜினாமா

அமைச்சர் ரோஜாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்