அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாமுக்கு சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாமின் பிறந்த நாளான இன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலையை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாடு இளைஞர் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இளைஞர் சங்கம் சார்பில் ெசன்னையில் முன்னாள் குடியரசு தலைவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சிலை திறப்பு விழாவில் இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்