பொய்யான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை: வேல்முருகன் தாக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: எந்தவிதமான கால அவகாசமும் தராமல், ஒரு மாத காலத்திற்குள் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருப்பது, பாஜ அரசின் மோசமான செயல்.

பாஜ அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நீதித்துறையை, தேர்தல் ஆணையத்தை, ராணுவத்தை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களையும் தன்னகத்துக்குள் வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆளுகின்ற பாஜ.வின் அழுத்தம் காரணமாகவே, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, 30 நாள் கால அவகாசத்திற்குள் தேர்தல் நடைபெறுவதாக பார்க்கிறோம். மோடி தலைமையிலான பாஜ அரசு, சட்டத்திற்கு புறம்பாக, 11 ஆயிரம் கோடி ரூபாயை, தேர்தல் நிதி என்ற பத்திரத்தின் மூலம் வாங்கியிருக்கிறது.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஊடகங்களில் உண்மைக்கு மாறாக, பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். சிஏஏ சட்டத்தால் ஒரு இஸ்லாமியருக்கும், ஈழத்தமிழருக்கும் பாதிப்பில்லை என்று என்னோடு வாதாட தயாரா?. பெரும்பான்மையான கட்சிகள் நோட்டுக்கு பேரம் பேசுகின்றனர். சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசினால், கூட்டணி அமைப்பதில் காலதாமதம் தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மோடி போன்ற காந்தியின் வரலாறு அறியாதவர்கள் அவர் குறித்து அவதூறு கருத்து சொல்வதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்: செல்வப்பெருந்தகை

ரூ.6.97 கோடி ஜிஎஸ்டி செலுத்தும்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மண்டபத்தில் நிர்வாகச் சிக்கல்களால் மூடல்; புதர்மண்டிக் கிடக்கும் சுற்றுலாத்துறை விடுதி