அண்ணா பல்கலை. முறைகேடு புகார்கள்: முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

சென்னை: சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இந்திய கணக்கு தணிக்கைத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு ஊழல்கள், விதிமீறல்கள், குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை:
கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பல்வேறு முன்னாள் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்