ஆண்டிபட்டி மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான ₹2.5 கோடி நிலம் மீட்பு

ஆண்டிபட்டி: தேனி‌ மாவட்டம், ஆண்டிபட்டி கடைவீதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமாக உள்ளன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி வருவாய் கிராமத்தில் காமராஜர் நகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள 4,224 சதுர அடியில் உள்ள புஞ்சை நிலம் திருக்கோயில் வசம் நேற்று கையகப்படுத்தப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை யாரும் சொந்தம்‌ கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ கூடாது மீறினால் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Related posts

ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி

தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் காட்டேரி – ஊட்டி புறநகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை

கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா