ஆந்திராவில் 81.86% வாக்குப்பதிவு: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைதேர்தலும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் வேலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றாலும் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்களவை தேர்தலில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 560 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்களில் சிலர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 333 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்தனர். மக்களவை தேர்தலில், தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 81.86 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு..!!

பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு

ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!!