ஆண்டாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத்திற்கு தயாராகும் திருவில்லிபுத்தூர் வீதிகள்: நகராட்சி சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகரில் தேர் வரும் ரத வீதியில் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் ரத வீதிகள் பளிச்சென்று காட்சியளிக்கின்றன. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 22ம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தை காணவும் தேரை வடம் பிடித்து இழுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வர உள்ளனர்.

இதையொட்டி ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர் வரும் பாதைகளில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் உத்தரவின் பெயரில் தேர் இழுக்கும் போது எளிதாக வரும் வகையில் சாலையில் உள்ள மணல்களை அப்புறப்படுத்தும் பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மணல் குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. சாலைகளில் மற்றும் ரத வீதிகளில் படிந்துள்ள மணல்களை அள்ளியதால் ரத வீதிகள் மற்றும் தேர் வரும் சாலைகள் பளிச் என காட்சியளிக்கிறது.

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணனிடம் கேட்டபோது, நகராட்சி சார்பில் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் போது வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நடமாடும் கழிப்பிட வாகனமும் வர வைக்கப்பட உள்ளது. நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன என தெரிவித்தார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்