அமாவாசையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.500

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.360க்கும் கனகாம்பரம் ரூ.300க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘அமாவாசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள், விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’’ என்றார்.

Related posts

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பீகாரில் உயிரிழப்புகள் அதிகம்: இந்தியாவில் கடும் வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு