காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2004-2007ம் ஆண்டு நுண்ணுயிரியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் தயாளன், பொருளாளர் மோகனரங்கன் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். கல்லூரியில் பயிலும்போது நடந்தவற்றை நினைவுகூர்ந்து குடும்பத்துடன் கூடி பேசி மகிழ்ந்தனர். பின்னர், கல்லூரிக்கு நினைவுப்பரிசாக பீரோ ஒன்றை வழங்கினர். மேலும் கல்லூரி வளாகத்தில் தாம் படித்ததற்கு நினைவாக மரக்கன்றுகள் நட்டனர். முடிவில், கல்லூரியின் துணை முதல்வரும், நுண்ணுயிரியல் துறை தலைவருமான பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து