அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார்!

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்தார். இரு தினங்களுக்கு முன்பு சரத்குமார் பாஜகவுடன் கூட்டணி அறிவித்திருந்தார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தனது கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார். 2007ம் ஆண்டு ஆக.31ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. பாஜகவுடன் சமக கூட்டணி என்று நேற்று வரை கூறி வந்த சரத்குமார், கட்சியையே பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும், பாஜகவில், கட்சியை இணைத்துள்ளேன். நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு; மக்கள் பணியில் நாங்கள் தொடர்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன் இவ்வாறு கூறினார்.

நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு
பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சி இணைப்பு கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பிய படி நிர்வாகி வெளியேறியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு