யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி


நியூயார்க்:கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில், முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 20 வயதான சீனாவின் கின்வென் ஜெங்குடன் மோதினார். இதில் 6-1, 6-4 என சபலென்கா எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று காலை நடந்த 4வது கால் இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், 6-1, 6-4 என 9ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வென்றார்.

அரையிறுதியில் நாளை மேடிசன் கீஸ்-சபலென்கா, முச்சோவா-கோகோ காப் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், 6-4, 6-3, 6-4 என சக நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரி ரூப்லெவ்வை வீழ்த்தினார். நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 6-3, 6-2, 6-4 என ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வென்றார். அரையிறுதியில் நாளை மெட்வெடேவ்- அல்காரஸ், ஜோகோவிச்- அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதுகின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்