மாமல்லபுரம் அருகே தீர்த்த குளத்தில் பாசிகள் அகற்றும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான ரங்கநாதர் திருக்கோயில் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் பாசிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் பிரசித்தி பெற்ற, மிகப் பழமையான நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகே நூற்றாண்டு கால சிறப்புமிக்க ரங்கநாதர் தீர்த்த குளம் அமைந்துள்ளது. இக்குளம் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் ரங்கநாதர் தீர்த்த குளம் முழுவதுமாக நிரம்பி ரம்யமாக காட்சியளித்தது. தற்போது, இக்குளத்தில் அதிகளவு ஆகாயத் தாமரைகள் மற்றும் பாசிகள் படர்ந்திருப்பதுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதற்கிடையே, நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா துவங்குகிறது. அதற்குமுன் இக்கோயிலுக்கு சொந்தமான தீர்த்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் பாசிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இக்கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் ரங்கநாதர் தீர்த்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை மற்றும் பாசிகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

4 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படைஅத்துமீறலை இந்தியா அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் பால் விலையை அதிரடியாக ரூ.2 குறைத்த தனியார் நிறுவனம்