மதுவில் விஷம் கலந்து குடித்த டிரைவர் சாவு

 

இடைப்பாடி, டிச.31: இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கார்த்திக்(25). பொக்லைன் டிரைவரான இவர், இடைப்பாடி வந்து விட்டு டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சின்னமுத்தூர் ரிங்ரோடு அருகே வேகத்தடையில் ஏறியபோது, கார்த்திக் தடுமாறி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வழியிலேயே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பூலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். காதல் விவகாரத்தில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்