மூளையில் கட்டி என்பது வதந்தி; மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் அஜித்குமார்: சுரேஷ் சந்திரா விளக்கம்!

சென்னை: சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார் என மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். ‘துணிவு’ படத்துக்கு பிறகு ‘விடா முயற்சி’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்தார். இதற்கிடையே நேற்று காலை அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

காது உள்பட உடல் உறுப்புகளுக்கான சோதனையும் செய்துகொண்டார். இந்நிலையில் அஜித்குமாருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். அதாவது; காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பு வீக்கம் அடைந்ததால் நடிகர் அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று இரவே சாதாரண வார்டுக்கு அஜித் மாற்றப்பட்டார். நரம்பு வீக்கத்துக்கான சிகிச்சை முடிந்து அஜித்குமார் ஓய்வில் உள்ளார்.

மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்பார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார்.

Related posts

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அவசர உத்தரவு ஆவணப்பிழையாகும் அரசு தரப்புக்கு வாய்ப்பு தராததும் பாரபட்சம்தான்: யூடியூபர் சங்கர் வழக்கில் 3வது நீதிபதி கருத்து

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக பாஜவில் பதவியில் உள்ளனர்: தமிழிசை பரபரப்பு பேட்டி

நயினார் நாகேந்திரன் கொடுத்த பணம் என்னாச்சு? கலவரம் செய்தால்தான் பாஜ தமிழ்நாட்டில் காலூன்ற முடியும்: பாஜ தலைவர் – இந்து மக்கள் கட்சி நிர்வாகி உரையாடும் ஆடியோ வைரல்