காவாலா பாடலுக்கு நயன்தாரா, சிம்ரன், சமந்தா ஆகியோர் நடனம்; ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட காணொலிகளுக்கு வரவேற்பு..!!

சென்னை: ஜெய்லர் படத்தில் இருந்து வெளியான காவலா பாடலுக்கு சிம்ரன், நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடனமாடும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள காணொலி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ஜெய்லர். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தில் இருந்து காவாலா எனும் முதல் பாடல் கடந்த ஜூலை 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வரும் காவாலா பாடலில் தமன்னாவின் நடனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. தமன்னா மட்டும் நடனமாடி இருந்த இப்பாடலுக்கு மற்ற நடிகைகள் நடனமாடுவது போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி காவாலா பாடலுக்கு சிம்ரன் நடனமாடுவது போல வெளியான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. சிம்ரனின் நடனத்தை கண்டு ரசித்த ரசிகர்கள், அடுத்தடுத்து மற்ற நடிகைகளின் நடனத்தையும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடனமாடும் வகையில் ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் நடிகைகள் மட்டுமின்றி கியாரா அத்வானி, கேத்ரினா கைஃப் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் நடனமாடும் வகையில் காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. செந்தில் நாயகம் என்பவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மட்டும் மாற்றி இதுபோன்ற காணொலிகளை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களை ரசிகர்கள் மட்டுமின்றி அந்தந்த நடிகைகளும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Related posts

அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை தமிழ்நாட்டில் தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி எம்பி பேட்டி

கூடாரமே காலி ஆகிறதா? அதிமுக காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகள்

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை